உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க நீங்கள் எப்போதும் ஆக்டிவாக இருத்தல் அவசியம். அதற்கான சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க நீங்கள் எப்போதும் ஆக்டிவாக இருத்தல் அவசியம். அதற்கான சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க நீங்கள் எப்போதும் ஆக்டிவாக இருத்தல் அவசியம். அதிலும், ஓமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் காலத்தில், உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. 50% உணவு 50% உடற்பயிற்சி ஆகும். அதிலும் குறிப்பாக, சருமப்பொலிவுக்கும், உடலின் கழிவுகள் நீங்கவும் அதிக நீர் அருந்தவேண்டும். 

இந்தப் பெருந்தொற்று சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சமூக அழுத்தங்கள் நம்மை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. நீண்டகாலம் தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பது, மன அழுத்தம், கடன் பிரச்சனை, உணர்வுகள் பாதிப்பு, மனச்சோர்வு, தூக்கமின்மை, பதற்றம், எரிச்சல், வெறுப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள மற்றொரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. எனவே, இவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்வது அவசியம். எனவே, நல்ல விஷயங்களுக்கு உங்களை ''ஆக்டிவாகவும்'' அதிக ஈடுபாட்டுடனும் செயல்பட வைத்திருக்க வேண்டியது அவசியம்.அதற்கான சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. தண்ணீரைவிட வெந்நீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி செரிமானத்த்தை மேம்படுத்தும். சாப்பிட்டதும் பத்து நிமிடம் கழித்து வெந்நீர் அருந்துவதால், உடலில் கெட்ட கொழுப்பு படிவதை தடுக்கும்.

2. உணவில் காய்கள், கீரைகள், பழக்கள், தானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான நேரப்படி உணவு அருந்துவது நல்லது.

3. உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதது உடற்பயிற்சி. வயதான காலத்தில் மட்டும்மல்ல எப்பொழுதுமே உடல் நன்றாக இருக்கவும், இயங்கவும், உடற்பயிற்சி, சைக்கிள், பயிற்சி, யோகா மற்றும் நடைபயிற்ச்சியை நமது உடல் வாகு மற்றும் வயதுக்கு ஏற்றவாரு தினசரி செய்துவர வேண்டும்.

4. உணவில் ஒரேவிதமான தானியத்தை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்து கம்பு, கேப்பை, கோதுமை, சிகப்பு அரிசி என வெவ்வேறு தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

5. புதிர்களை விடுவிப்பது அவசியம். சுடோகோ, குறுக்கெழுத்து போன்றவை உங்களது நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவையும் சிறந்த வொர்க் அவுட்கள் ஆகும். எனவே, நீங்கள் ஒவ்வொரு புதிய நாளை துவங்கும் போதும், அன்றைய புதிய விஷயங்களில் கற்றலின் அவசியத்தை புரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான தொழில்முனைவோரின் வெற்றிக்கு, இது முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

6. உரிய நேரத்தில் உண்டு, சரியான நேரத்தில் உறங்கினால், உடல் ஆரோக்கியமும்ம், மன ஆரோக்கியமும் மேம்படும். உடலில் பொலிவு கூடிடும், ஆரோக்கியம் பெருகிடும். ஏனெனில், சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது.

7. நமது மாறிப்போன உணவுமுறை காரணமாக உடல் சூடு பிரச்சனை அதிகரித்துவிட்டது. தினமும் சிறிது அளவு கம்பு கூழ் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். தவறான உணவு பழக்கங்களின் விளைவாக மலசிக்கல் பிரச்சனை அதிகமாகிவிட்டது.

8. நாம் நமது வாழ்க்கையில் நாள்தோறும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம், மூளை ஆக்டிவாக இருப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது மூளையை புத்துணர்ச்சி அடைய செய்து நமது உடல் நலனை பாதுகாக்கிறது. மேலும், உங்கள் மூளையை ஆக்டிவாக வைத்திருக்க புத்தக வாசிப்பு மிகவும் இன்றியமையாததாகும்.

எனவே, நீங்கள் ஆக்டிவாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். ஏனெனில், ஓர் இசையைக் கற்றுக்கொள்ளும் போதும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும் மன அழுத்தம் குறைகிறது என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.