Asianet News TamilAsianet News Tamil

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம்... தவிர்க்க மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

தைராய்டு இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகள் எவை என்று இந்த கட்டுரையில் காண்போம்.

Health food choices for thyroid problem
Author
Chennai, First Published Jan 29, 2022, 11:41 AM IST

இன்றைய நவீன காலகட்டத்தில், சர்க்கரை வியாதி, உடல் எடை, பெண்களுக்கு மாதவிடாய் போன்றவை உலகளாவிய பிரச்சனைகளாக மாறியுள்ளது. அந்த பட்டியலில் தற்போது, தைராய்டு பிரச்சனையும் இணைந்துள்ளது. நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்த் தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மேற்கத்திய உணவு முறை, உடல் உழைப்பு இல்லாமை, போன்றவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது. அவற்றை, மருத்துவமனை சென்று உரிய சிகிக்சை மேற்கொள்வது அவசியம். இருப்பினும், அவற்றை கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Health food choices for thyroid problem

 எனவே, தைராய்டு இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்று இந்த கட்டுரையில் காண்போம்.

1. தைராய்டு பிரச்சனை இருந்தால, ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

2. கால்சியம் அதிகம் நிறைந்த பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும்.  

 3. பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும். எனவே பேக்கரிப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.

4. அயோடின் உறிஞ்சும் தன்மைக் கொண்ட முட்டைக்கோஸ், கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு  ஏற்படுத்தும்.

சாப்பிட கூடிய உணவுகள்:
 
செலிமினியம் குறைபாடு தைராய்டு பிரச்சனைக்கு முக்கிய காரணம். எனவே, செலிமினியம் அதிகம் கொண்ட காளான், பூண்டு உள்ளிட்ட உணவு பொருட்களை உட்கொள்வது அவசியம்.

பசலை கீரையில் உள்ள வைட்டமின்கள், புரோடீன்கள் தைரய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உகந்தது.
 
பழங்களில், தைரய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆப்பிள் பயனுள்ளதாக இருக்கும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தப்படும் என்பதோடு, தைராய்டு சுரப்பியும் சரியாக வேலை செய்யும்.  

பெர்ரி:

பெர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை சீர் செய்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பெர்ரிகளில் அதிக அளவிலான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. எனவே, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் பிளம்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Health food choices for thyroid problem

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழத்தை உட்கொள்வது ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதால் செல்கள் மேலும் சேதமடையாமல் பாதுகாக்கும். ஃப்ரீ ரேடிக்கல்கள் தைராய்டு சுரப்பியின் வீக்கத்தை ஏற்படுத்தும். இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரையை சீராக்குவதுடன், கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.

அன்னாசிப்பழம்:

அன்னாசிப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உள்ளதால் தைராய்டு பிரச்சனைகளினால் ஏற்படும் சோர்வை நீக்குகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையை போக்கவும் உதவியாக இருக்கும்.எனவே, மேற் சொன்ன உணவுகளை தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் உண்டால் ஆரோக்கியமாகவும், நலமாகவும் வாழலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios