பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த மாதுளையின் மகத்தான பயன்கள் பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம்.
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. எண்ணற்ற மருத்துவ குணம் நிறைந்த மாதுளையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்று புண் ஆறும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும். இதனை ஜூஸாகவும் குடிக்கலாம்.

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகை சுவைகள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு வகை மாதுளையும் சக்தியளிக்கும். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.
பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த மாதுளையின் மகத்தான பயன்கள் பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம்.
மாதுளையில் பயன்கள்:
1. மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது.
2. உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
3. மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.
4. திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
5. மாதுளை ஜூஸை தொடர்ந்து 30 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
6. இதய நோய்கள், இதய பலவீனம் நிவர்த்தியாகும். ரத்த விருத்தி ஏற்படும். சீத பேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் நலம் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள், நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
7. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

மாதுளை ஜூஸ் தயாரிப்பு:
தினமும் -ஒரு மாதுளம் பழம், சர்க்கரை -தேவையான அளவு, பால் - 5 டீஸ்புன்.
செய்முறை:
மாதுளம் பழத்தை கழுவிவிட்டு இரண்டாக வெட்டி மாதுளம் முத்துக்களை தனியாக எடுக்கவும்.
அரை டம்ளர் பால், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அடிக்கவும். பிறகு சல்லடையில் நன்றாக வடிகட்டவும். உடனே பருகவும்.
மாதுளை ஜூஸ் பயன்கள்:
மாதுளம் பழச்சாறு குடிப்பதால் இரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது.மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தம் அடர்த்தியாவைதை தடுக்கிறது. இதனால் இதயத்தில் அல்லது உடலின் வேறு எந்தப் பகுதியிலும் இரத்த உறைவு உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதுளை சாறு இதயத்திற்கு சிறந்தது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.

எனவே, தினமும் காலை வெறும் வயிற்றில், 1 டம்ளர் மாதுளை ஜூஸ் குடிக்க வேண்டும். இணை நோய் உள்ளவர்கள், சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.
