முதல்வர் எடுத்த அதிரடி முடிவு...! இனி எந்த மருமகளும் மாமியாரை அடிக்க முடியாது..!  

ஹரியானா மாநிலத்தில் மாமியாரை சரமாரியாக அடித்து துன்புறுத்திய மருமகளை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் 

ஹரியானாவில் உள்ள  மகேந்திரகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் காந்தா தேவி. இவர் தனது மாமியாரான சாந்த் பாய் என்பவரை பயங்கரமாக தாக்கி அடிக்கும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வெளியானது. அதாவது வயது முதிர்ந்த நிலையில் சாந்த் பாய் சில மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சாந்த் பாயின் கணவர் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து உயிரிழந்தவர் என்பதனால் இன்றளவும் சாந்த் பாய்க்கு ஓய்வூதிய தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரிடமிருந்து இந்த ஓய்வூதிய தொகையை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் சாந்த் பாய்க்கு உணவு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் மருமகள் காந்தா தேவி. இந்த கொடுமையெல்லாம் சில நாட்களாக பார்த்து வந்த அக்கம்பக்கத்தினர் இல் அக்கம்பக்கத்தினரின் ஒருவர் வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அந்தப் பெண்ணை உடனடியாக கைது செய்து, மூதாட்டிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வரே கருத்து தெரிவித்து உள்ளார். அதில், "வளர்ச்சி அடைந்துள்ள இந்த சமூகத்தில் இதுபோன்று மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்ளும் சம்பவங்களை பார்க்கும் போது, மனம் வேதனை கொள்கிறது... மேலும் மாமியாரை தாக்கிய அந்தப் பெண் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என பதிவு செய்துள்ளார்.