என்கவுண்டர் செய்த போலீசாரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு..! அறிவிப்பை வெளியிட்ட பிரபல தொழிலதிபர்..! 

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை என்கவுண்டரில் சுட்டுக்  கொல்லப்பட்டு உள்ளதை பாராட்டி, இதில் தொடர்புடைய  போலிசாருக்கு தலா ஒரு லட்சம் பரிசு வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நரேஷ் செல்பார் இவர் 'ராகுரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச்சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை லாரி ஓட்டுனர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர். இக்கொடூர கொலை வழக்கில் லாரி ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையானதண்டனைவழங்க வேண்டுமென நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அழைத்து செல்லும்போது, அவர்கள் தப்பி ஓட முயன்ற போது 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். குற்றவாளிகள் மீதான என்கவுண்டருக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு கிளம்பி உள்ளது. இதற்கிடையில் என்கவுன்டரில் ஈடுபட்ட தெலங்கானா போலீஸார் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக தொழிலதிபர் நரேஷ் செல்பார் தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து உள்ளது