நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு ஆசிரியர் தின வாழ்த்துக்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை இங்கு காணலாம்.

ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. தன்னுடைய வாழ்நாளை கல்விக்காக அர்ப்பணித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை தான் நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். இவர் இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி, இரண்டாவது ஜனாதிபதி மற்றும் ஒரு சிறந்த ஆசிரியர் ஆவார்.

ஆசிரியர்கள் நமக்கு புத்தக அறிவை மட்டுமல்ல நம் வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வழியையும் காட்டுகிறார்கள். மேலும் சமூகத்தில் ஒரு நல்ல குடிமகனாக இருக்க நம்மை ஊக்குவிக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், நாளை (செப்.5) ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. எனவே, அந்நாளில் உங்களது ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நல்வாழ்த்துக்கள் செய்திகளை அனுப்புங்கள். வாங்க அதுகுறித்து பார்க்கலாம்.

1. நீங்கள் எனக்கு கொடுத்த கல்வி என் வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும். உங்களுக்கு என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

2. நீங்கள் அறிவு தீபத்தை ஏற்றி, இருளிலிருந்து என்னை ஒலிக்கு கொண்டு வந்தீர்கள். உங்களுக்கு என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

3. வாழ்க்கையின் அர்த்தத்தை எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். போராட்டங்களின் மத்தியிலும் முன்னேற வழிகாட்டினீர்கள். உங்களுக்கு என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

4. உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்தது மட்டுமல்ல, என்னை வெற்றிகரமான மனிதனாக மாற்றி உள்ளீர்கள். உங்களுக்கு என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

5. நீங்கள் எப்போதும் எனக்கு ஆதரவளித்து, ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளித்தீர்கள். உங்களுக்கு என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

6. ஒவ்வொரு கஷ்டத்தையும் எதிர்த்து போராடவும், ஒவ்வொரு கனவையும் நினவாக்கவும் நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த பயணம் முழுமை அடையாது. உங்களுக்கு எப்போதும் என் நன்றி ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

7. என்னை நல்ல மனிதனாக மாற்றிய ஆசிரியருக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

8. வெற்றிகரமான ஒவ்வொரு நபரின் பின்னாலும் ஒரு சிறந்த ஆசிரியரின் கடின உழைப்பு இருக்கிறது. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

9. வார்த்தைகளின் அறிவை நான் பலரிடம் கற்றுக் கொண்டேன். ஆனால் வாழும் கலையை உங்களிடம் மட்டுமே கற்றுக் கொண்டேன் என் ஆசிரியரே! உங்களுக்கு என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

10. ஆசிரியர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் கலைஞர்கள். எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!