இன்று சகோதர - சகோதரி பாசத்தை கொண்டாடும் நாளான ரக்ஷா பந்தன். இனிமையான வாழ்த்துக்களை அனுப்பி இந்த பண்டிகை நாளை கொண்டாடி மகிழுங்கள்.

ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே என ஒவ்வொரு உறவின் முக்கியத்துவம் மற்றும் உன்னதத்தை போற்றும் வகையில் மரியாதை செலுத்தும் விதமாக நாம் கொண்டாடுகிறோம். அதுபோலதான் சகோதரரின் உறவை கொண்டாடி மகிழும் பண்டிகை தான் ரக்ஷா பந்தன். வடமாநிலங்களில் இந்த பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்நாளில் பெண்கள் தங்களது சகோதரரின் கையில் ராக்கி கட்டி ஆர்த்தி எடுத்து தங்களது பாசத்தை வெளிப்படுத்துவார்கள். சகோதரர்கள் அவர்களுக்கு பரிசு வழங்குவார்கள். உடன் பிறந்த சகோதரருக்கும் மட்டுமல்ல உடன்பிறவா சகோதரருக்கு கூட கையில் ராக்கி கட்டி இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை நாளை கொண்டாடலாம். அந்த வகையில் இன்று (ஆக. 09) ரக்ஷா பந்தன் என்பதால் உங்கள் சகோதரரின் இதயத்தை தொடும் சில வாழ்த்து செய்திகள் இங்கே உள்ளன. அதை உங்கள் சகோதரருக்கு அனுப்பி இந்த பண்டிகை நாளை கொண்டாடி மகிழுங்கள்.

சகோதரருக்கு அனுப்ப வேண்டிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் :

1. " என் அன்பு சகோதரரே உனக்கு இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்! நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என்று நான் நம்புகிறேன்."

2. "என் அன்பு சகோதரா, உனக்கு என் மனமார்ந்த ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்! உனது வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்."

3. " எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி என் அன்பு சகோதரருக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!"

4. "என்றும் எப்போதும் நீ தான் என் சூப்பர் ஹீரோ. ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் சகோதரா!"

5. "ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் அண்ண! நீங்க தான் இதுவரைக்கும் இருந்ததிலேயே ரொம்ப பெஸ்ட் அண்ணன். நீங்க எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி!

6. "என் அருமையான அண்ணனுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்! எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி!!"

7. " நீங்க என் அண்ணனா கிடைச்சதுக்கு நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை ரக்ஷா பந்தன் நினைவூட்டுகிறது. உங்களுக்கு என் அன்பையும், அன்பான வாழ்த்துக்களையும் அனுப்புகிறேன். ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் என் செல்ல அண்ணா!"

8. " நீங்க என் வாழ்க்கையில வந்ததிலிருந்து எல்லாமே நல்லபடியா மாறிடுச்சு. ஒவ்வொரு நாளும் நீங்க எனக்கு உத்வேகம் அளிக்கிறீங்க. உங்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் அண்ணா!"

9. " நீங்க தான் என்னோட பெஸ்ட் பிரண்டு அண்ண! உங்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!!"

10. " பல மையில் தொலைவில் இருந்தாலும் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் நம் பிணைப்பு வலுவடையும். ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் என் அன்பு அண்ணா!"