பிறந்த நாள் வாழ்த்துக்கள் "துர்கா ஸ்டாலின்"! சாதுர்த்தியமாக சாதிக்கும் சாதனை பெண்மணி..! 

வருடம் முழுக்க உள்ள ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவையாக இருந்தாலும், மார்ச் 13 ஆம் தேதி கூடுதலான சிறப்பு வாய்ந்தது என சொல்லும் அளவுக்கு கூடுதல் சிறப்பு செய்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின். அப்படி என்ன சிறப்பு இன்று என்றால் துர்கா ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் தான்.

இதில் என்ன இருக்கு அப்படி ஒரு ஸ்பெஷல்? என சிந்திக்க தோன்றலாம். ஆனால் குடும்ப தலைவி என்ற ஒரு விஷயத்தை தாண்டி கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஸ்டாலினின் ஒவ்வொரு நகர்வுக்கும் தூணாக இருந்து துவம்சம் செய்பவர் துர்கா ஸ்டாலின்

திருமணமான நாள் முதல் இன்று வரை குடும்ப தலைவியாகவும், அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு சமயத்திலும் ஸ்டாலினுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து கட்டி காத்து வருபவர். 

சாதனை பெண்மணி 
 
துர்கா ஸ்டாலினை பொறுத்த வரையில் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் தீர்க்கமாக எடுக்க கூடியவர். அவர் எடுக்கும் எந்த முடிவிலும் ஒரு தெளிவு இருக்கும். திமுக தலைவர் ஸ்டாலினின்  மனைவி துர்கா என தெரிந்தவருக்கெல்லாம் அவர் பள்ளி பருவத்தில் இருந்தே எப்படிப்பட்ட திறமைசாலி என அறிய வாய்ப்பு இல்லை...


 
துர்கா அவர்கள் பள்ளி பருவத்தில் அனைத்து போட்டியிலும் கலந்துகொண்டு பரிசு வென்றவர். குறிப்பாக விளையாட்டு என்றாலே அலாதி பிரியம்.அப்போதே மாவட்ட அளவிலான் போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பு பரிசுகளையும் சான்றிதழையும் வைத்து இன்றளவும் நீங்கா நினைவலையில் உள்ளார். அவ்வளவு ஏன் கிரிக்கெட் என்றால் இவருக்கு பிரியம் 

புத்தகம் படிப்பதில் அலாதி ஆர்வம் 

சிறு வயது முதலே புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அதிலும் கதைகள் என்றால் விரும்பி படிப்பவர். இப்படி பல புத்தங்கள் படித்து தன்னை மேன்மேலும் செம்மையாக்கி  கொண்டவர் துர்கா. மேலும் கலைஞரின் புத்தகம் படிப்பது அவ்வளவு பிடிக்குமாம். கடைசியாக நெஞ்சுக்கு நீதி புத்தகம் படித்து உள்ளார். அதனை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என விருப்பம் கொண்டவர் 

சிறந்த மருமகளும் இவரே.. மாமியாரும் இவரே..!

கலைஞர் குடும்பத்தில் திறமையான மருமகளாக மட்மின்றி...தன்னுடைய  மருமகளுக்கும்  சிறந்த மாமியாராக, நல்ல தோழியாக வாழ்க்கை வழிகாட்டியாக நல்லது கெட்டது  சொல்லிக்கொடுத்து வாழ்க்கை புரிதலை உணர்த்தும் சிறந்த தாயும்..!

கண்டிஷன் போடும் அன்பு அம்மா

துர்கா- ஸ்டாலின் தம்பதியின் மகன் உதயநிதி ஸ்டாலினும் சரி மகள் செந்தாமரையும் சரி.. அப்பாவுக்கு ரொம்ப செல்லம். ஆனால் அம்மா துர்காவிடம் கொஞ்சம் பயம் தான். பள்ளிக்கு  நேரத்துக்கு செல்வது முதல்.. குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கிய உணவை  மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வரை கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்து பிள்ளைகளை வளர்த்தவர். அவ்வளவு ஏன்? மாடி தோட்டத்தில், கற்றாழை,துளசி என மூலிகை செடிகளை வளர்த்து அதனை தேவைப்படும் போது பயன்படுத்துபவர். மாடி தோட்டத்தில் கீரைகள் வளர்த்து ஆரோக்கிய உணவிற்கு முக்கியத்தும் கொடுப்பவர்.

கடவுள் பக்தி

பகுத்தறிவு சிந்தனை குறித்து திமுக பேசினாலும், தனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது என்பதை எந்த மாற்று கருத்தும் இல்லாமால் வெளிப்படையாகவே சொல்லி,  வெளிப்படையாகவே கோவில்களுக்கு சென்று வருபவர். அதே போன்று  தன்னுடைய விருப்பத்திற்கு யாரும் தடை சொல்ல மாட்டார்கள் என கலைஞர் பற்றியும் கணவர் ஸ்டாலின் பற்றியும் பெருந்தன்மையாக வெளிப்படுத்துபவர் துர்கா

இதுபோல... இன்னும் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..!