Hair straightening: பியூட்டி பார்லர் போகாமல், காசு செலவு பண்ணாமல்...வீட்டில் ஸ்ட்ரெயிட்னிங் செய்வது எப்படி,..?

Hair straightening: பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலருக்கும் தனது அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் தலைமுடிதான். 

Hair straightening at home naturally

பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலருக்கும் தனது அழகை மெருகேற்றிக் காட்டுவதே அவர்களின் தலைமுடிதான். பெண்களின் முடி அழகை வர்ணித்து ஏராளமான கவிதைகள் உள்ளன. அப்படியான, முடியில் பல்வேறு ஹேர் ஸ்டைல் செய்து அசத்துவார். சிலர் முடி பார்ப்பதற்கு ஸ்ட்ரெயிட்னிங் செய்தது போல அழகாக இருக்கவேண்டும். ஹேர் கண்டிஷனர் போட்டது போல எப்போதும் பளபளப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பர். 

Hair straightening at home naturally

ஆனால், இதற்கு செயற்கையான முறையை பின்பற்ற கூடாது. பியூட்டி பார்லர் போகக்கூடாது என்று எண்ணுவர். ஏனெனில், தற்போது மன அழுத்தம், கெமிக்கல் பொருட்கள் தண்ணீர் மாறுதல், மாசு உள்ளிட்ட காரணங்களால் முடி அதிகமாக கொட்டி விடுகிறது. 

எனவே, வீட்டில் இருந்தபடியே எந்தெந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய மூடியை சினிமா நடிகை முடி போல அழகாக மாற்றுவது. என்பதைப் இந்த பதிவில் பார்பபோம்.

முதலில் அரை மூடி தேங்காயை துரு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தேங்காய் பாலை எடுக்க வேண்டும். 

கிடைத்திருக்கும் திக்கான தேங்காய்ப்பாலில்  2 டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். தேங்காய்ப்பால் நமக்கு ஜெல் போல கிடைத்திருக்கும். இதோடு விட்டமின் ஈ டேப்லெட் 2 அல்லது 3 உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலக்குங்கள். பிறகு சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால், உங்களுடைய தலைமுடிக்கு தேவையான பேக் தயாராகிவிட்டது.  

இந்த ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்வது எப்படி..?

முதலில் தலைக்கு ஷாம்பு போட்டு நன்றாகக் தேய்த்து குளித்து விட வேண்டும். தலை நன்றாக காய்ந்ததும்,  இந்த பேக்கை தலைமுடியில் எல்லா இடங்களிலும் படும்படி போடலாம்.  முடியை நீளமாக விட்டு விடுங்கள்.

Hair straightening at home naturally

கண்டிஷனர் உபயோகிப்பது போன்று உபயோகிக்க வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து, சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசி விடவும், வாரத்தில் 2 நாட்கள் இப்படி செய்தால், உங்க முடி நிரந்தரமா எப்போதும் ஸ்டைட்னிங் பண்ண மாதிரி மாறிடும். கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

மேலும் படிக்க...Daytime sleeping: பகல் தூக்கம் யாருக்கு அவசியம்..? யாருக்கு ஆபத்து ..? தெரிந்து கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்..!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios