Daytime sleeping: பகல் தூக்கம் யாருக்கு அவசியம்..? யாருக்கு ஆபத்து ..? தெரிந்து கொள்ள வேண்டிய 3 குறிப்புகள்..!

Daytime sleeping: சிலர், பகலில் சிறிது நேரம் தூங்கினால் புத்துணர்ச்சி உணர்வு ஏற்படுகிறது என்கின்றனர். ஒரு சிலர், பகல் நேர தூக்கம் உடலை சோம்பேறி ஆக்குது என்கின்றனர். இவற்றில் எது சரி, என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Daytime sleeping is good or bad

சிலர், பகலில் சிறிது நேரம் தூங்கினால் புத்துணர்ச்சி உணர்வு ஏற்படுகிறது என்கின்றனர். ஒரு சிலர், பகல் நேர தூக்கம் உடலை சோம்பேறி ஆக்குது என்கின்றனர். இவற்றில் எது சரி, என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வேலை செய்து சோர்வாக இருக்கும் போது, ​​மதியம் சிறிது ஓய்வு எடுத்தால், புத்துணர்ச்சி ஏற்படும் என்பது உண்மை தான். ஆனால், சிலரின் அதிகப்படியான தூக்கம் உடலுக்கு ஆரோக்கிய பாதிப்பை உண்டு பண்ணுகின்றது. எப்படி என்பதை கீழே பார்ப்போம்.

பகல்நேர தூக்கம் உங்களுக்கு சோர்வு மற்றும் சோம்பலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், அதன் பாதிப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Daytime sleeping is good or bad

 பகல் தூக்கத்தின் விளைவு:

பகல்நேர தூக்கம் இரவின் இயற்கையான உறக்கச் சுழற்சியைப் பாதிக்கலாம், அத்தகைய சூழ்நிலையில், இரவில் நல்ல தூக்கம் இருக்காது.

பகல்நேர தூக்கம் உங்களை மந்தமாக்குகின்றன.பல ஆராய்ச்சிகளில் இது மந்த நிலை ஏற்பட்டு பாதிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஆயுர்வேதத்தில், பகலில் தூங்குவது உடலுக்கு நல்லதல்ல, அவ்வாறு செய்வது கபம் மற்றும் பித்த தோஷங்களுக்கு இடையில் சமநிலை இல்லாத நிலைக்கு வழிவகுக்கும் என்கின்றது.

அப்படியானால் பகல் நேர தூக்கம் யாருக்கு அவசியம்?

வேலை பார்த்து களைப்பில் உள்ளவர்கள், மதியம் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் தூங்குவது, ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது பல்வேறு ஆய்வுகளின் முடிவில் வெளிவந்துள்ளது. ஆனால், மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது உங்கள் உடலை மந்தமாக்க கூடும்.

Daytime sleeping is good or bad

ஆயுர்வேதத்தின் படி, ஆரோக்கியமாக இருப்பவர்கள் பகலில்  சிறிது நேரம் தூங்கலாம் என்கின்றனர்.

அப்படியாக, பகலில் தூங்கும் போது அலாரத்தை வைத்து கொண்டு தூங்கலாம், சிறிது நேரம் தூங்கலாம். இவை உங்களை புத்துணர்ச்சியாக வைக்கும்.  இருப்பினும், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்துவது சிறந்தது. இல்லையெனில், எடை இழப்பு, நினைவாற்றல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் தோன்றும்.எனவே, மேற்சொன்ன வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.

மேலும் படிக்க...Homemade lip balm: உதட்டில் வெடிப்பு, வறட்சிக்கு...நிவாரணம் தரும் ஹோம்மேட் லிப் பாம்...! இனி கவலை வேண்டாம்..?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios