Asianet News TamilAsianet News Tamil

Homemade lip balm: உதட்டில் வெடிப்பு, வறட்சிக்கு...நிவாரணம் தரும் ஹோம்மேட் லிப் பாம்...! இனி கவலை வேண்டாம்..?

Homemade lip balm: கடைகளில், காசு கொடுத்து கெமிக்கல் கலந்த லிப் பாம் வாங்கி உபயோகிப்பது விட வீட்டிலிருக்கும் சில பொருட்களை கொண்டு, லிப் பாம் தயார் செய்யலாம்.

Best natural lip balm for dry lips homemade
Author
Chennai, First Published Mar 6, 2022, 9:08 AM IST

கடைகளில், காசு கொடுத்து கெமிக்கல் கலந்த லிப் பாம் வாங்கி உபயோகிப்பது விட வீட்டிலிருக்கும் சில பொருட்களை கொண்டு, லிப் பாம் தயார் செய்யலாம்.

குளிர் காலம் தொடங்கியதில் இருந்து பல உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக உதடுகள் குளிர் காலத்தில், ஈரப்பதத்தை தக்க வைக்க முடியாமல் உடனே வறண்டு போகும் தன்மை கொண்டது. இதனால் சிலருக்கு புண்கள் தோன்றும்.இது போன்று பிரச்சனைகள் இருந்தால் சருமத்தில் ஈரப்பதம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். அவர்கள் நீர்சத்து உள்ள உணவுகளை உண்பது நல்லது.

Best natural lip balm for dry lips homemade

ஆனால், சிலருக்கு, உதடுகளை சுற்றி வறட்சி, வெடிப்பு தோன்றும் அப்படியான சூழ்நிலையில், உதடுகளில் உள்ள வெடிப்பை எப்படி அகற்றுவது என்பதை  இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். லிப் பாம் தயாரிக்க உங்கள் வீட்டிலிருக்கும் சில பொருட்களே போதும்.  அவை என்னென்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய்

ஒரு சிறிய கன்டெய்னர்

பெட்ரோலியம் ஜெல்லி

எண்ணெய் பொருட்களில் ஒன்று 

பழைய லிப்ஸ்டிக்

செய்முறை விளக்கம்:

1. ஒரு வட்டமான பாத்திரத்தில் அரை டேபிள் ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி மற்றும்  2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ள வேண்டும்.

2. பிறகு அடுப்பில், கேஸ் பற்ற வைத்து குறைந்தது 20 வினாடிகள் கெட்டியான பேஸ்ட் ஆகும் வரை மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

3. இப்போது உங்கள் வீட்டில் இருக்கும் பழைய லிப்ஸ்டிக் சிலவற்றை துருவி, பேஸ்டில் சேர்க்கவும்., பேஸ்ட் லிப்ஸ்டிக் நிறம் ஆகும் வரை நன்கு கலக்கவும்.10 வினாடிகளுக்கு பிறகு அதை ஒரு சிறிய கன்டெய்னரில் மாற்றவும்.

Best natural lip balm for dry lips homemade

 4. அதனை எடுத்து, அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பிறகு எடுத்து பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும், இவற்றில் காசும் குறைவு, கெமிக்கல் இருக்காது. இவை உங்களுக்கு பாதுகாப்பானது. நீங்கள் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள். 

வீட்டில் மேற்சொன்ன பொருட்கள் இல்லாதவர்கள், தேன், மற்றும் நெய் உதடுகளுக்கு பயன்படுத்தலாம் இவை உங்கள் உதடுகளுக்கு ஆரோக்கியம் மற்றும் பளபளப்பை தரும்.

மேலும் படிக்க...Women self defense tips: பெண்கள் ஆபத்து நேரத்தில் தங்களை தற்காத்து கொள்வது எப்படி..? ஈஸியான 5 வழிமுறைகள்..!

Follow Us:
Download App:
  • android
  • ios