Asianet News TamilAsianet News Tamil

புதுசா வீடு வாங்கப் போறீங்களா ? இன்னும் ஒரு மாசம் பொறுங்க !! ஏன் தெரியுமா ?

புதிய வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்தது 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதால், புதிய வீடு வாங்குபவர்கள் இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்தால் குறைந்த விலைக்கு வீடு கிடைக்க வாய்ப்புள்ளது.

gst for new house
Author
Delhi, First Published Feb 25, 2019, 8:20 AM IST

கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கான ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி.யை ஒரு சதவீதமாகவும் குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

ஜிஎஸ்டி விகிதங்களை அவ்வப்போது மாற்றி அமைப்பது பற்றி ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

gst for new house

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், நேற்று டெல்லியில் நடைபெற்றது. அருண் ஜெட்லி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறைக்கும், வீடு வாங்குவோருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

gst for new house

அதன்படி, கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் உள்ள வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதுபோல், குறைந்த விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 8 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படுகிறது.. இந்த வரி குறைப்பு, ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

gst for new house

மேலும், குறைந்த விலை வீடுகளுக்கான விலை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடுகளே ‘குறைந்த விலை வீடுகள்’ என்று கருதப்பட்டது. இனிமேல், மெட்ரோ நகரங்களிலும், பிற நகரங்களிலும் ரூ.45 லட்சம் வரையுள்ள வீடுகள் குறைந்த விலை வீடுகளாக கருதப்படும்.

அதே சமயத்தில், மெட்ரோ நகரங்களாக இருந்தால் 60 சதுர மீட்டர் பரப்பளவு வரை கொண்ட வீடுகளும், பிற நகரங்களாக இருந்தால் 90 சதுர மீட்டர் பரப்பளவு வரை கொண்ட வீடுகளும் குறைந்த விலை வீடுகளாக கருதப்படும்.

gst for new house

சென்னை, பெங்களூரு, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், ஐதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகியவை மெட்ரோ நகரங்கள் ஆகும்.

இந்த முடிவு, கட்டுமான துறைக்கு ஊக்கம் அளிக்கும். குறைந்த விலை வீடுகளுக்கான விலை வரம்பு உயர்த்தப்பட்டு இருப்பதால், வீடு வாங்குவோர் இன்னும் தரமான வீடுகளை வாங்க முடியும் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios