வெளியானது குரூப் -1 தேர்வு முடிவுகள்..! வரலாற்றில் முதல் முறையாக 145 நாட்களிலேயே வெளியீடு..!

காலியாக இருந்த 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட குரூப் -1 முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 

181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் 12 முதல் 14 ஆம் தேதி  வரையிலான 3 நாட்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 441 பேர் தேர்வு எழுதினார் என்பது  குறிப்பிடத்தக்கது. 

தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் tnpsc.gov.in, npsc.exams.in என்ற அரசு இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், டி.என்.பி எஸி.சி தேர்வு வரலாற்றிலேயே தேர்வு எழுதிய பின் மிக குறைந்த மாத கால இடைவெளியில் முடிவுகள் வெளியாகி உள்ளது என்றால், அது இந்த முறை வெளியான  முடிவுகள் தான். அதன் படி தேர்வு முடிந்து சரியாக 145 நாட்களுக்கு பின் இன்று முடிவுகள் வெளியாகி உள்ளது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை  டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.