உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, நடைபயிற்சி, நடனப் பயிற்சி என எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாள்தோறும் கிரீன் டீ குடிங்கள் என்ற அட்வைஸ் பல திசைகளில் இருந்தும் நமது காதுகளுக்கு வந்து சேர்கிறது.

கடைகளில் விற்கப்படும் கிரீன் டீ தூள்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர் விவரம் தெரிந்தவர்கள். உண்மையில், நிழலில் உலர்த்தப்பட்ட கிரீன் டீ இலைகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை வெந்நீரில் போட்டு, சில நிமிடங்கள் மூடிவைத்தால், அதன் சாறு வெந்நீரில் இறங்கிவிடும். அந்த சாறைதான் நாம் குடிக்க வேண்டும். இதில் சர்க்கரையோ, பாலோ சேர்க்கக் கூடாது. சிறிது துவர்ப்பு சுவையாக இருக்கும் என்பதால், விரும்பினால் தேன் கலக்கலாம். அல்லது சிறிது எலுமிச்சை சாறை கலந்து பருகலாம்.

இளமையான தோற்றத்துக்கு

கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin), பாலிபீனால்கள் (Polyphenol) ஆகியவை உள்ளன. இவை சிறந்தஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இதனால், நமது இளமை பாதுகாக்கப்படும். உங்களை யாரும் அங்கிள், ஆண்டி என்று கூப்பிட மாட்டார்கள்.

உடல் சுறுசுறுப்புக்கு

கிரீன் டீ குடிப்பதால், உடல் புத்துணர்ச்சி அடைகிறது. கிரீன் டீயில் சிறிதளவு காபின் இருப்பதால், அது நரம்புகளை புத்துணர்ச்சியாக்குகிறது. இதனால், மூளை நன்றாக இயங்கும். இதனாலேயே உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மறதி குறையும்

கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பதால், மறதி நோய் குறையும். பார்கின்சன் வருவதற்கான வாய்ப்பு 25% வரை குறைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

புற்றுநோய் வாய்ப்பை குறைக்கும்

கிரீன் டீயில் ஆண்டிஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால், உடலில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும். உடலில் தேவையற்ற கட்டிகள் வளராது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறையும்.

உடல் எடை குறைய

தொலைக்காட்சி விளம்பரத்திற்காக அல்ல, உண்மையில் கிரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும். இதனால், உடல் எடை குறைந்து, உடல் பொலிவு பெறுவதுடன், மன அழுத்தம், மன சோர்வு ஆகியவையும் பறந்தோடும்.