இப்படிப்பட்டவரா  நடிகர்  விஜயகாந்த்..! படிக்கும் போதே மனமுருகும் மக்கள்...!

ஆரம்ப காலகட்டத்தில் ஓர் சிறந்த அதிரடி நாயகனாக அறியப்பட்ட விஜயகாந்த் பின்னர் அரசியலில் ஈடுபட்டு தமிழக மக்கள் மனதில் அடுத்த இடத்தை பிடித்தார். தற்போது அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியலில் முழு வீச்சில் செயல்படவில்லை என்றாலும் அவரைப்பற்றிய சில விஷயங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறது.

அப்படி என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்... இதுவரை தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழ் படங்களை தவிர வேறு எந்த மொழிப் படத்திலும் விஜயகாந்த் நடித்தது கிடையாது.

இந்தியாவிலேயே மிக சிறந்த குடிமகன் விருதை பெற்றவர் இவர் தான். தனது பிறந்த நாள் என்றால் வருடந்தோறும் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு 10 லட்சம் நிதி உதவி செய்துவரும் நல்ல நபர். திரையுலகில் வாய்ப்பு பெறுவது மிகவும் கடினமான ஒன்று, அப்படி ஒரு தருணத்தில் முதன் முதலில் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு திரையுலகில் வாய்ப்பு கொடுத்தவரும் இவர்தான்.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் முதலில் வந்து உதவி செய்வது இவரே... ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அளித்து உதவ முதல் ஆளாய் இருப்பார். இலவச மருத்துவமனை வைத்தவரும் இவரே. நடிகர் சங்கம் கஷ்டப்பட்ட போது இவருடைய முயற்சியால் வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயை கொண்டு கடனை அடைத்து சிறப்பாக செயல்படுத்தியவர்.

ஜெயலலிதா அவர்களை நேருக்கு நேர் நின்று எதிர்க்கக்கூடிய ஒரே தைரியசாலி இவர். மீடியா என்பதால் இப்படித்தான் பேச வேண்டும்.. அப்படித் தான் பேச வேண்டும் என்று இல்லாமல் அவர் எப்போதும் இருப்பது போலவே அவர் பாணியில் பேசக் கூடிய சிறந்த நபர். இப்படி  சொல்லிக்கொண்டேபோகலாம் அவரை பற்றிய பெருமைகளை...விஜயகாந்த் பற்றிய இந்த  தகவல் சமூகவலைத்தளத்தில் தேமுதிக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் ஏராளமானோர் லைக்ஸ் கொடுத்தும், கருத்து தெரிவித்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.