விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! சூப்பர் சலுகையை அறிவித்த முதல்வர் எடப்பாடி..!

கொரோனா எதிரொலியால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது. மக்கள் அவரவர் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இந்த ஒரு நிலையில் அவர்களது தொழில் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக விவசாய மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

இந்த ஒரு நிலையில் உணவு மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் எந்த ஒரு தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு தருணத்தில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அதன்படி,

பழங்கள் மற்றும் காய்கறிகளை குளிர்பதன கிடங்கு களில் வைத்து பாதுகாக்க வசூலிக்கப்படும் கட்டணம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வசூல் செய்யப்படமாட்டாது என்றும், பழங்கள் மற்றும் காய்கறிகளை சேகரித்து வினியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன் வழங்க உள்ளதாகவும், வியாபாரிகள் சந்தை கட்டணத்தை வரும் 30ம் தேதி வரை செலுத்த தேவையில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் மக்கள் மிக எளிதாக உணவுப் பொருட்களை பெறுவதற்கும், விற்பனையாளர்களுக்கு ஏதுவாகவும் 500 நடமாடும் வாகனங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டால் அவசர கால தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்தி பயன் பெறலாம் என்றும் குறிப்பிட்டு, அதற்கான தொலைபேசி எண்ணையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெறுவதற்கு காலை 10 மணி முதல் 6 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது,

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 

044-22253884, 22253883, 22253496, 95000 91904