பெற்றோர்களே..! குழந்தைகளை "விஜயதசமியன்று"  ஸ்கூலில் சேர்க்க போறீங்களா ..? இதை தெரிஞ்சிக்கோங்க...! 

இன்று சரஸ்வதி பூஜை, நாளை விஜயதசமி என்பதால் இன்றைய தினத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாளாக பார்க்கப்படுகிறது,

நாம் செய்யும் தொழில் மேன்மேலும் விருத்தி அடைய வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் எல்லாம் நல்லதாகவே அமைய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டு பூஜை செய்வது வழக்கம்.

பொதுவாகவே சரஸ்வதிபூஜையன்று பாடப் புத்தகங்களை வைத்தம், செய்யும் தொழிலில் பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்தும் பூஜை செய்து வணங்குவர். இதுதவிர வாகனத்தை சுத்தம் செய்து விட்டு பூஜை செய்வதும் உண்டு. மேலும் விஜயதசமி நாளான நாளை குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆவல் தெரிவிப்பார்கள்.

இதற்காக அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறந்து வைத்திருக்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்கும் அல்லது முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் ஆவல் தெரிவிப்பார்கள் என்பதால் எனவே நாளை பள்ளியை திறந்து வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.