வரி செலுத்தாதற்கு திரையரங்கம் முன்பு இப்படி ஒரு காரியத்தை செய்த அரசு அதிகாரிகள்..!

திருவொற்றியூரில் உள்ள எம்.எஸ்.எம் திரையரங்க நிர்வாகம் கேளிக்கை மற்றும் சொத்து வரியை கட்டாததால் மாநகராட்சி அதிகாரிகள் திரையரங்கம் முன்பு குப்பை லாரியை நிற்க வைத்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

2018 - 2019 ஆம் ஆண்டுக்கான சொத்து வரி மற்றும் கேளிக்கை வரி சேர்ந்து ரூபாய் 5,99,970 செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக திரையரங்கம்  உரிமையாளருக்கு தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும், உரிய அறிவுரையை வழங்கி வந்தனர். 

இருப்பினும் வரி செலுத்தாத காரணத்தினால் திரையரங்கு முன்பு இன்று, "உடனடியாக வரி செலுத்த வேண்டும்" என நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இது தவிர குப்பை லாரியை கொண்டு வந்து திரையரங்கம் முன்பு நிற்க வைத்து எதிர்ப்பை தெரிவித்தனர் மாநகராட்சி அதிகாரிகள்.

இதன் காரணமாக இன்று மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.