தமிழக அரசு வேலை ரெடி..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! 

கோயமுத்தூர் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு  பணியிடங்களை நிரப்புவதற்கு, அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதன் படி,

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை:  83

பணி: நகல் படிப்பவர், நகல் பரிசோதகர், 11 போஸ்ட், மாதம் ரூ.19,500 - 62,000 சம்பளம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்ததாலே போதும் 

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர், 16 போஸ்ட், மாதம் ரூ.19,500 - 62,000 சம்பளம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்ததாலே போதும்

பதவி: அலுவலக உதவியாளர், 21 போஸ்ட், மாதம் ரூ.15,700 - 50,000 சம்பளம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று  இருந்தாலே போதும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, வாகனத்தை இயக்கம் அனுபவம் கண்டிப்பாக தேவை. 

 

பணி: காவலர், இரவுக்காவலர், 16 போஸ்ட், மாதம் ரூ.15,700 - 50,000 சம்பளம், தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் அவசியம். 

பணி: துப்புரவுப் பணியாளர், 4 போஸ்ட், மாதம் ரூ.15,700 - 50,000 சம்பளம்,  தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதுமானது. 

பணி: பெருக்குபவர், 5 போஸ்ட், ரூ.15,700 - 50,000 சம்பளம், தமிழ் எழுத படிக்க தெரிந்திருத்தல் அவசியம். 

மேற்குறிப்பிட்ட அனைத்து பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோயமுத்தூர் 641018

இது குறித்த முழு விவரம் அறிந்துகொள்ள, https://districts.ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20NO%2001%20of%202019_1.pdf என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும். கடைசி தேதி: 28.06.2019. அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். வாழ்த்துக்கள்.