40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை காண ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர இருக்கிறார்.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றோடு ஒன்பது நாட்கள் முடிவில் 10 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் வரும்12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அத்திவரதரை தரிசிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வர உள்ளார்.

இதற்காக தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார்.அன்றைய தினத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி மணிக்குள் அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் அங்கிருந்து சென்னை வந்தடையும் கவர்னர் மாளிகையில் தங்கிவிட்டு மறுதினம் காலை ஆந்திர மாநில ரேணிகுண்டா விற்கு செல்வதாக செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.