government ban 3000 porn websites
மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் மக்களவையில் எழுத்து பூர்வமாக ஒரு விளக்கத்தை அளித்தது.
அதில், நாட்டில் ஆபாச இணையதளங்கள் செயல்படுவதாகவும் அதனை சரியாக கண்காணிக்கப்பட்டு, ஆபாசத்தை வெளியிட்டு வரும் 3௦௦௦ இணையதளங்களை அதிரடியாக முடக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் , குற்றச்செயல்களை கண்காணித்து வருவதாகவும்,ஆன்லைன் குற்றங்கள் அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக தற்போது, ஆபாச இணையதளங்களை அதிரடியாக முடக்கியுள்ளது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.
மேலும் சமூக வலைத்தளங்களின் மூலமாக நடைப்பெற்று வரும் குற்ற செயல்களை தடுக்கவும் ,தொடர்ந்து குழந்தைகள் மீதான ஆபாச தாக்குதல்கள் தொடர்பாகவும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது
