நம் உடம்புக்கு தாறுமாறு எனர்ஜி தரும் "செம்ம மாஸ்" உணவு பொருள் இதுதான்...! 

உடலுக்கு உடனடி எனர்ஜி தரக்கூடிய, அதிக வைட்டமின், புரதச்சத்து இருக்கக்கூடிய உணவுகளை நாம் சூப்பர் ஃபுட்ஸ் என்கிறோம். இங்கு குறிப்பிட்டிருக்கும் ஏதேனும் ஒரு சூப்பர் உணவை தினமும் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள், உடல் சோர்வை போக்குங்கள்.

அவகேடோ

அதிக கலோரிகள் கொண்டுள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்போருக்குச் சிறந்தத் தேர்வு. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. வாழையைவிட அதிக பொட்டாசியம் கொண்டது. கொலஸ்ட்ரால், டிரைகிளைசரைட் அளவைக் குறைக்கும். கர்ப்பப்பையின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு உதவுகிறது.

கிவி

வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், சருமம், கூந்தலுக்கு நல்லது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.டி.என்ஏ சிதைவுகளில் இருந்து காக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.உடல் எடை குறைக்க உதவுகிறது.செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.

தக்காளி

வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. ஆல்பா-டொமாட்டின் (Alpha-tomatine) என்ற சத்து, ப்ராஸ்டேட், வயிறு, நுரையீரல், மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்கும்.லைகோபீன், இதய நோய்களைத் தடுக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.பார்வைத்திறனை மேம்படுத்தும். உடல் எடை குறைய உதவும்.ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கும். பித்தப்பைக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.இயற்கையான ஆன்டிசெப்ட்டிக் இது. சருமம் பொலிவு பெறும்.

வெள்ளரி

வெள்ளரிக்காயில் 90% நீர் இருக்கிறதென்றாலும், அதில் வைட்டமின்  கே, சி,பி5, மேன்கனீஸ், பொட்டாஷியம்,மெக்னீஷியம் உள்ளன. தினமும் வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உருவாவதைக் கட்டுப்படுத்தும்.இரதய நோய் வருவதையும் குறைக்கிறது.  வெள்ளரிக்காயை ஜூஸாகவோ, சாலட்டாகவோ உட்கொள்ளலாம்.  
முள்ளங்கி

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.மூல நோய் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும். 

புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.கெட்ட கொழுப்பைக் கரைக்கும். நீர்ச்சத்துக்களை உடலில் சேர்க்கும்.மூட்டு வலி, வீக்கத்தைக் குறைக்கும். பற்களுக்கு நல்லது. ரத்தத்தில் உள்ள பிலுருபினை  சீர்செய்வதால், மஞ்சள்காமாலையைக் குணமாக்க உதவும். உடல் எடையைக் குறைக்க உதவும். வெண்புள்ளிகள் நோயின் தீவிரத்தை குறைக்கும். நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பீட்ரூட்

ரத்தசோகையைக் குணமாக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.செரிமானப்பாதையை ஆரோக்கியப்படுத்தும்.இதய நோய்கள் வராமல் தடுக்கும். எலும்பு அடர்த்திக் குறைதல் நோயைத் தடுக்கும். கணையம், மார்பகம், ப்ராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும்.இதில் உள்ள நைட்ரிக் அமிலம்  ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மறதி நோயைத் தவிர்க்கும்.

கேரட்:

எலும்பு, பற்களுக்கு நல்லது. கல்லீரலைப் பலப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சருமப் பொலிவு மேம்படும். வயிற்றுப்புண்கள் குணமாகும். செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.நுரையீரல், பெருங்குடல், வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

காலிஃபிளவர்

சல்ஃபோராபேன் (Sulforaphane) சத்து இருப்பதால், புற்றுநோய் செல்களை அழிக்கும். மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கும். கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும். நினைவுத்திறனை அதிகரிக்கும்.

புரோகோலி

உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்யும்.இளநரையைத் தடுக்கும்.மூளையின் திறனை அதிகரிக்கும். அல்சைமரைத் தடுக்கும்.

ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.இதில் உள்ள சத்துக்கள், வெண்பூசணியில் உள்ளதால், புரோகோலியை விரும்பாதோர் வெண்பூசணியைச் சாப்பிடலாம்.

முட்டைக்கோஸ்

ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்யும்.சரும நோய்கள் இருப்போர், முட்டைக்கோஸ் சூப் சாப்பிட நச்சுகள் வெளியேறும்.கை, கால் நடுக்கம் சரியாகும். நரம்புத்தளர்ச்சி பிரச்னை சரியாகும். 

பாகற்காய்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். கல்லீரலைப் பலப்படுத்தும்.வயிற்றில் உள்ள பூச்சிக்களை அழித்து வெளியேற்றும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். சரும நோய்களைக் குணமாக்கும். மாரடைப்பைத் தடுக்கும்.


வெண்டைக்காய்

ஃபோலிக் அமிலம் நிறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.உடல் எடையைக் குறைக்கும்.வைட்டமின் பி9 இருப்பதால், மூளைக்கு நல்லது.நோய் எதிர்ப்பு சக்தி, பார்வைத்திறனை அதிகரிக்கும்.

முருங்கைக்காய்

300 நோய்களைத் தடுக்கக்கூடிய சக்தி முருங்கைக்கு உண்டு.சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும்.ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.கால்சியம் உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கு உதவும். ஆண்மையைப் பெருக்கும்.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு நல்லது. குழந்தையின்மை, இனப்பெருக்கக் குறைபாடுகள் குணமாக வாய்ப்புகள் அதிகம்.மீனில் உள்ள சத்துக்கள் முருங்கையிலும் உள்ளது. கேரட்டைவிட 14 மடங்கு சத்துக்கள் முருங்கையில் உள்ளன.விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கத்தரிக்காய்

டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும். பைட்டோநியூட்ரியன்ட்ஸ் இருப்பதால், நினைவுத்திறன் அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் காக்கும். இதய நோய்கள் வருவதைத் தடுக்கும். மூளைச் செல்களைப் பாதுகாக்கும். 

அவரைக்காய்

கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும்.கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்பு வளர்ச்சி சீராக இருக்கும்.கெட்ட கொழுப்பைக் கரைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதய நோய்களைத் தடுக்கும்.