தங்கம் விலை ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் 512 அதிகரித்து ரூ.25688 விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் 512 அதிகரித்து ரூ.25688 விற்பனை செய்யப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ரூ 64 உயர்ந்து ரூ.3211 க்கு விற்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இடையில் 25 ஆயிரத்துக்கு குறைந்தது. மீண்டும் கடந்த 11ம் தேதி முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு உயந்தது. இந்நிலையில் தற்போது ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் 512 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ. 25,176--க்கு விற்கப்பட்டது. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,367 ஆகவும், சவரனுக்கு ரூ.26,936-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் வெள்ளி 40.30 காசுகளுக்கு விற்பனையானது. இன்று வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 40.90 காசுகளுக்கும் காசுகளுக்கும், கிலோ ரூ.40,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தங்க நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.