மீண்டும் எகிறி தங்கம் விலை..! 

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது. மேலும் கடந்த 2 மாத  காலமாகவே ஒரு சவரன் தங்கம் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது. இது தவிர, ஒரு சவரன் நகை வாங்க வேண்டும் என்றால், செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி 30 ஆயிரம் ரூபாயை தாண்டி செல்கிறது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் விலை சிறிது ஏற்றம் காணப்பட்டது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,  

ஒரு கிராமுக்கு ரூபாய் 2 அதிகரித்து 3334 ரூபாயாக இருந்தது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 26 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனையாகிறது 

மாலை நேர நிலவரப்படி..! 

ஒரு கிராமுக்கு ரூபாய் 6 அதிகரித்து 3340 ரூபாயாக இருந்தது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 26 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகிறது 

வெள்ளி விலை நிலவரம்...! 

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 20 பைசா அதிகரித்து ரூ.45.00 க்கு விற்கப்படுகிறது