தீபாவளி எதிரொலி..! தொடர்ந்து தங்கம் விலை உயர்வு...! 

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து வருகிறது

இதற்கு முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்ததன் மூலம் சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதாவது செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் 34 ஆயிரம் வரை ஆனது.

இந்த நிலையில் மீண்டும் குறைய தொடங்கிய தங்கம் விலை தற்போது 29 ஆயிரத்து தாண்டி விற்பனையாகி வருகிறது. அவ்வாறு பார்த்தால் தற்போதைய நிலவரப்படி செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 32 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 4 ருபாய் அதிகரித்து, சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்தும்,சவரன் 29 ஆயிரத்து 184 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 49.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது 

தீபாவளி நெருங்கி வரும் இந்த தருணத்தில் தங்கம் விலை மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை விரைவில் 30 ஆயிரத்தை கடக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது