தங்கம் விலை கிடு கிடு உயர்வு..! சவரன் 29 ஆயிரத்தை நெருங்கியதால் பொதுமக்கள் அதிருப்தி ..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

கடந்த இரண்டு வார காலமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 33 ஆயிரம் ரூபாய் ஆகிறது என்ற நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து உள்ளது.அதன்படி பார்த்தால் ஒரு கிராம் 3612 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 90 பைசா அதிகரித்து 48.50 ரூபாயாக உள்ளது.