Asianet News TamilAsianet News Tamil

செய்கூலி சேதாரம் ஜி.எஸ்.டி என சேர்த்து ஒரு சவரன் 36,000..! பரிதவிக்கும் பொதுமக்கள்..!

ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி என சேர்த்து மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

gold rate hike as on 6th jan 2020
Author
Chennai, First Published Jan 6, 2020, 12:24 PM IST

செய்கூலி சேதாரம் ஜி.எஸ்.டி என சேர்த்து ஒரு சவரன் 36,000..! பரிதவிக்கும் பொதுமக்கள்..! 

புத்தாண்டு பிறந்தவுடன் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில்  கிராமுக்கு ரூ.64 ரூபாய் உயர்ந்து 3896.00 ரூபாயாகவும், சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 168 ரூபாய்க்கும் விற்கப்ப்டுகிறது. 

gold rate hike as on 6th jan 2020

உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய மந்தமான சூழ்நிலை, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ) மேலும் மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து  தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. வெள்ளியை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து 52.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

gold rate hike as on 6th jan 2020

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி என சேர்த்து மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இருந்தபோதிலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் தங்கம் வாங்கயே ஆக வேண்டிய நிலை இருப்பதால் குறைந்த அளவிலாவது தங்கம் வாங்க வேண்டிய சூழலில் இருப்பதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios