மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது.

சவரன் 31 ஆயிரத்தை தாண்டியது..! செய்கூலி சேதாரம் சேர்த்தால் 36 ஆயிரம்..! டென்ஷானாகும் மக்கள்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 32 அதிகரித்து சவரன் 31 ஆயிரத்தை கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது.

இருப்பினும் சவரன் விலை 31 ஆயிரம் தாண்டி விற்பனை ஆவதால் செய்க்கோழி சேதாரம் என சேர்த்து இன்றைய நிலையில் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 34 முதல் 35 ஆயிரம் ருபாய் நிலை உள்ளது. 

அதன் படி, தற்போது கிராமுக்கு ரூ.32 அதிகரித்து 3888.00 ரூபாயாகவும், சவரனுக்கு 256 அதிகரித்து 31 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 50 பைசா அதிகரித்து 49.70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.