மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..! 

இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு ரூ.3 குறைந்து உள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 33 ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர். 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.3 குறைந்து 3732.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 24 குறைந்து 29 ஆயிரத்து 856 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.4 அதிகரித்து 3736.00 ரூபாய்கும் சவரனுக்கு ரூ.32 அதிகரித்து 29 ஆயிரத்து 888 ரூபாய்க்கும் விற்கப்ப்டுகிறது.  

வெள்ளி விலை நிலவரம்..! 

வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து  50.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு தங்கம் விலை மேலும் அதிகரிக்க கூடும் என தமிழகத்தின் தங்க நகை வியாபாரிகள் சம்மேளன தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். அதன்படி உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலை தற்போது குறைய வாய்ப்பே இல்லை என்றும்  தற்போது இருக்கும் விலையைவிட அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதனால் பொதுமக்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர்.