சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! தீபாவளியன்று சவரன் ரூ.30 ஆயிரம் தானோ..?

சவரன் விலை தொடர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து உள்ளது 

அதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்த பிறகு தங்கம் விலையும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அதன் விளைவாக 27 ஆயிரம் ரூபாய் இருந்த சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர் மீண்டும் சற்று குறைந்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சவரன் விலை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.24 அதிகரித்து சவரனுக்கு ரூ. 192 அதிகரித்து, 29 ஆயிரத்து 496 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.6 உயர்ந்து சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்தும் 29 ஆயிரத்து 544 ரூபாய்க்கும்  விற்கப்படுகிறது. ஆக இன்று  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து  விற்பனையாகி வருகிறது

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 70 பைசா அதிகரித்து வெள்ளி 50.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.