மாலை நேரத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை..!

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்திய பின்னர் சவரன் விலை 26 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது.

இந்த திடீர் உயர்வால் பெரும் அதிருப்திக்கு ஆளான பொதுமக்கள் தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இருந்தபோதிலும் சுபநிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்கியே ஆகவேண்டும் என்ற நிலை இருப்பதால் விலை ஏறினாலும் தங்கம் வாங்கி சென்றனர் பொதுமக்கள்.

இருந்தபோதிலும் தொடர்ந்து விலை ஏறிக்கொண்டே உள்ளதே.. என்ற கருத்துகளை முன்வைத்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வார காலமாக தொடர் சரிவில் இருந்து வருகிறது தங்கம் விலை. அதன்படி சவரன் 30,000 என்று இருந்த நிலையில் தற்போது 28 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து உள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

கிராமுக்கு ரூ.17 ரூபாய் உயர்ந்து, 3603.00 ரூபாயாகவும்,சவரனுக்கு 136 ரூபாய் உயர்த்தும், 28 ஆயிரத்து  824 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதாவது ஒரே நாளில் சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து உள்ளது. 

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு 10 ரூபாய்  அதிகரித்து 3613 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து  904 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

கிராமத்துக்கு 10 பைசா 50.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.