மாலை நேரத்திலும் உயர்ந்த தங்கம் விலை..! எவ்வளவு ருபாய் தெரியுமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.26 அதிகரித்து 3888.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 3889.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ. 8 உயர்ந்து  31 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை நெருங்கும் நிலையிலும் இருப்பதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும் ஏழை குடும்பத்தை சேந்தவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் என்பது கூட எட்டா கனியாக உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 10 பைசா அதிகரித்து 49.70 ரூபாயிக்கும் விற்கப்படுகிறது.