மாலையில் மிதமாக உயர்ந்த தங்கம் விலை..!  

கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இதன் மூலம் தற்போது ஒரு சவரன் விலை 29 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

இதற்கு முன்னதாக ஒரு சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை குறைவு காரணமாக தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது.

அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 645 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் 80 பைசா குறைந்தது 50.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

தங்கம் விலை நிலவரம் 

கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 3645.00 ரூபாயாகவும், சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து, 3649.00 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..!  

கிராமுக்கு 40 பைசா உயர்ந்து 50.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.