கடந்த இரண்டு மாத காலத்தில் குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்த உடன் 30 ஆயிரத்தை தாண்டி சவரன் விலை இருந்தது.

மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்தது தங்கம் விலை...! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று காலை நேர நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்து இருந்தது.பின்பு மாலையில் மீண்டும் உயர்வை கண்டு உள்ளது. 

கடந்த இரண்டு மாத காலத்தில் குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்த உடன் 30 ஆயிரத்தை தாண்டி சவரன் விலை இருந்தது.பின்னர் மீண்டும் படிப்படியாக குறைந்து சவரன் விலை 28 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. தீபாவளிக்கு நெருங்க உள்ள தருணத்தில் நாளுக்கு நாள் சவரன் விலை அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்

காலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.23 குறைந்து, சவரனுக்கு ரூ.184 குறைந்தும், சவரன் ரூ.29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்தும், ரூ.29 ஆயிரத்து 184 ரூபாய்க்கு விற்பனையாகிறது

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 30 பைசா அதிகரித்து, 49 ரூபாய்க்கு விற்பனையாகிறது