Tamil

Fridge Odor: பிரிட்ஜ் துர்நாற்றத்தை போக்க இதை மட்டும் உள்ளே வையுங்க

Tamil

பிரிட்ஜ் பிரெஷ்ஷா இருக்கணுமா?

பிரிட்ஜை திறந்தாலே கெட்ட வாடை அடிக்கிறதா? இந்த எளிய, இயற்கையான வழிகளைப் பின்பற்றி உங்கள் பிரிட்ஜை மீண்டும் மணக்க மணக்க பிரெஷ் ஆக்குங்கள்.
Image credits: AI Image
Tamil

பேக்கிங் சோடா

கிண்ணத்தில் 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடாவைப் போட்டு பிரிட்ஜின் ஒரு மூலையில் வையுங்கள். இது பிரிட்ஜில் உள்ள எல்லா கெட்ட வாசனையையும் உறிஞ்சிவிடும். 

Image credits: Freepik
Tamil

சார்கோல் (கரி)

துர்நாற்றத்தை உறிஞ்சுவதில் இது ரொம்பவே பவர்ஃபுல். ஆக்டிவேட்டட் சார்கோல் துண்டுகளை ஒரு கிண்ணத்தில் போட்டு பிரிட்ஜில் வையுங்கள். சில மணி நேரங்களிலேயே இது வேலை செய்யத் தொடங்கிவிடும்.
Image credits: AI Image
Tamil

வினிகர்

ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் வெள்ளை வினிகரை ஊற்றி பிரிட்ஜில் வையுங்கள். பிரிட்ஜை சுத்தம் செய்யும்போது தண்ணீரில் வினிகரைக் கலந்து ஷெல்ஃப்களைத் துடைக்கலாம்.

Image credits: social media
Tamil

எலுமிச்சை

ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அதன் மேல் கொஞ்சம் உப்பைத் தூவி பிரிட்ஜ் ஷெல்ஃபில் வையுங்கள். இது பிரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை நீக்கி, பிரிட்ஜ் முழுவதும் நல்ல மணம் வீசச் செய்யும்.
Image credits: AI Meta
Tamil

காபி தூள்

உங்களுக்கு காபி வாசனை பிடிக்குமானால், பயன்படுத்திய அல்லது ஃபிரெஷ்ஷான காபி தூளை ஒரு தட்டில் பரப்பி 24 மணி நேரம் பிரிட்ஜில் வையுங்கள். இது கெட்ட வாசனையைக் கூட உடனடியாக நீக்கிவிடும்.

Image credits: Getty

Grey Hair: இளம் வயதிலேயே முடி நரைத்துவிடுகிறதா? கவலை வேண்டாம்.. சூப்பர் டிப்ஸ்

Health Tips: சாப்பிட்ட உடனே குளிக்கக் கூடாதா? காரணம் இதுதான்!

Indian Food Ban: அட நம்ம ஊரு சமோசா, நெய் எல்லாம் வெளிநாட்டுல தடையா?

ரூ.10,000-க்குள் வாங்கக்கூடிய டிரெண்டிங் காஞ்சி பட்டுச் சேலைகள்