தங்கம் மீண்டும் அதிரடி விலை உயர்வு...! சவரன் 34 ஆயிரத்தை நெருங்கியது..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.104 உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.13 உயர்ந்து 4207 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்கப்பட்டது 

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து 50.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.