Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி தரும் "தங்கம் விலை"..! தீபாவளிக்குள் இந்த அளவுக்கு உயருமா..?

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியதிலிருந்து தங்கம் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டது.

gold rate high as on 3rd oct 2019
Author
Chennai, First Published Oct 3, 2019, 7:52 PM IST

அதிர்ச்சி தரும் "தங்கம் விலை"..! தீபாவளிக்குள் இந்த அளவுக்கு உயருமா..? 

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து உள்ளது

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியதிலிருந்து தங்கம் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டது.

பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இதற்கு முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்ததன் மூலம் சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதாவது செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் 34 ஆயிரம் வரை ஆனது.

gold rate high as on 3rd oct 2019

இந்த நிலையில் மீண்டும் குறைய தொடங்கிய தங்கம் விலை தற்போது 29 ஆயிரத்து தாண்டி விற்பனையாகி வருகிறது. அவ்வாறு பார்த்தால் தற்போதைய நிலவரப்படி செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, சவரன்  29 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதே போன்று வெள்ளி கிராமுக்கு 1.20 அதிகரித்து 49.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு 6 ருபாய் குறைந்து 3630.00 (-6), சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து உள்ளது, இருந்தாலும் சவரன் விலை 29 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தீபாவளி நெருங்க உள்ளதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது என கருதப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios