தங்கம் விலை அதிரடி உயர்வு ..! சவரன் ரூ.32 ஆயிரத்தை 576..! பொதுமக்கள் பெரும் அவதி..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.21 உயர்ந்து 4072.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

சவரன் விலை 32 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 37 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

1.72 லட்சம் மாணவர்கள் பதிவு..! அதிரடி நடவடிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன்..!

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 10 பைசா அதிகரித்து 52.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி வரும் காலங்களில் அதிக சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாத சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து பெருகி வரும் தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.மேலும் எப்போதுதான் சவரன் விலை குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த சமயத்தில், இன்று யாரும் எதிர்பாராத வண்ணமாக 33 ஆயிரத்தை தொடும் நிலை ஏற்பட்டு உள்ளதால் மக்கள் பெருமை கவலை  தெரிவிக்கின்றனர்.