சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! சவரன் 34 ஆயிரம் தொட 152 ரூபாய் மட்டுமே பாக்கி..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.109 உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.109 உயர்ந்து 4231 ரூபாய்க்கும், சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 848 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வானத்தில் தோன்றிய "இந்திய வரைபடம்"..! இந்த அதிசயத்தை பார்த்து மகிழுங்கள்..!

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 50.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், கொரோனா எதிராலியின் காரணமாகவும் தங்கம் விலை தொடர் ஏற்றம் கண்டு வருகிறது என வல்லுநர்கள் தெரிவித்து  உள்ளனர்.