மாலை நேரத்தில் தங்கம் விலை மாற்றம்..! எவ்வளவு தொகை தெரியுமா..? 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்ந்த பின்னர், சவரன் விலை 4 ஆயிரம் வரை உயர்ந்து, சவரன் ரூபாய் 30 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.

பின்னர் மீண்டும் சற்று குறைய தொடங்கிய தற்போது 28 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக அப்போது தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறைந்து வந்தது. இந்த நிலையில் அவ்வப்போது மீண்டும் உயர்ந்து சவரன் 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

செய்கூலி சேதாரம் என சேர்த்து ஒரு சவரன் விலை 32 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 45 ரூபாய் குறைந்தும்,சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்பனை ஆகிறது

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் 

கிராம் ரூ. (-45) குறைந்து, 3597.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.360 குறைந்து, 28 ஆயிரத்து  776 ரூபாய்க்கு விற்பனையாகிறது

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.1 குறைந்து 3596.00 ரூபாயாகவும் சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை நிலவரம்
 
கிராமுக்கு  20 பைசா அதிகரித்து 50.50 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.