மாலை நேரத்தில் குறைந்த சவரன் விலை..! தங்கம் இப்ப வாங்கலாமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் உயர்வு கண்டு உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.8 உயர்ந்து 4136 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 88 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.14 குறைந்து 4122.00 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.112 குறைந்து 32 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து  49.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா எதிரொலி காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து உள்ளதே இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர் உயர்வை கண்டு வருகிறது என கூறப்படுகிறது.