மாலை நேரத்தில் குறைந்த தங்கம் விலை..! சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 4071.00 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 56 உயர்ந்து 32 ஆயிரத்து 568 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.7 குறைந்து 4064.00 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

சவரன் விலை ஏற்கனவே 33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் அடைந்து இருந்தது. இந்த நிலையில் சற்று குறைந்து 32 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து 49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.