சவரன் விலை  உயர்வு..! கிராம் ரூ.3815..!  

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.2 அதிகரித்து 3815.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே  தங்கம் விலை உயர காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.2 அதிகரித்து 3815.00 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 10 பைசா குறைந்து 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.