சவரன் சரசரவென விலை உயர்ந்து.. மாலையில் வெறும் ரூ.2 குறைந்த சோகம்..!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 3980.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்கபடுகிறது 

மாலை நேர நிலவரப்படி,

கிராமுக்கு ரூ.2 குறைந்து 3978.00 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.8 குறைந்து 31 ஆயிரத்து 832 ரூபாய்க்கு விற்கபடுகிறது 

சவரன் விலை 32 ஆயிரத்தை நெருங்க உள்ளதால், இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 50 பைசா குறைந்து 51.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இனி வரும் காலங்களில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாத சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து பெருகி வரும் தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.