அடடே... சவரன் விலை குறைந்து விட்டதே ... ஒரு 2 சவரன் நகை இன்றே வாங்கலாமா?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.13 குறைந்து 3911.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து  31 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை தாண்டியும் விற்பனையாகி வருகிறது. 

இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 40 பைசா அதிகரித்து 50.40  ரூபாயிக்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், வர்த்தகர்களும்  தங்கத்தின் மீது முதலீடு செய்ய அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் விலை 35 ஆயிரத்தை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் சவரன் விலை ஏறுவதும் இறங்குவதுமாகவே உள்ளதால் எந்த தினத்தில் சற்று  தங்கம் விலை குறைந்து உள்ளதோ அன்றே வாங்கிவிடுவது நல்லது.