மளமளவென குறைந்தது தங்கம் விலை..! குஷியான மக்கள்...!

தொடர்ந்து கடந்த 6 நாட்களாக  தங்கத்தின் விலை தொடர் சரிவை நோக்கி உள்ளது. சென்ற வாரம் சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்த நிலையில் இன்றும்  குறைந்து உள்ளது. 

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு கூட தங்கம் வாங்க பெரும் தயக்கம் காண்பிக்கின்றனர். இருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் தங்கம் வாங்கி வருகின்றனர். செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன்  தங்கம் விலை 31 ஆயிரம் முதல் 32 ஆயிரம் வரை வருகிறது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 28 ருபாய் குறைந்து தங்கம் விற்பனையாகிறது.

காலை நேர நிலவரப்படி, 

22 Ct ஆபரண தங்கம் ஒரு கிராம் 28 ரூபாய்  குறைந்து, 3584.00 ரூபாயாகவும், சவரனுக்கு 224 ரூபாய் குறைந்தும் 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது

வெள்ளி விலை நிலவரம்

கிராமுக்கு 2.20 பைசா குறைந்து  48.70 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.