அடிதூள்..! மாலையில் மீண்டும் குறைந்தது தங்கம் விலை..! 

தொடர்ந்து கடந்த 4 நாட்களாக  தங்கத்தின் விலை தொடர் சரிவை நோக்கி உள்ளது. சென்ற வாரம் சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்த நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சவரனுக்கு 1048 ரூபாய் வரை குறைந்து உள்ளது. 

இருப்பினும் இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து குறைந்தது 33 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கம் வாங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு கூட தங்கம் வாங்க பெரும் தயக்கம் காண்பிக்கின்றனர். இருந்த போதிலும் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாது என்பதால்..15 சவரன் தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் 12 சவரன் நகை வாங்கினால் போதுமானது என்ற மன நிலைக்கு வந்துள்ளனர். 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 16 ருபாய் குறைந்து தங்கம் விற்பனையாகிறது.

காலை நேர நிலவரப்படி, 

22 Ct ஆபரண தங்கம் ஒரு கிராம் (-16) ரூபாய்  குறைந்து, 3618.00 ரூபாயாகவும், சவரனுக்கு 128 ரூபாய் குறைந்தும் 28 ஆயிரத்து 944 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 3614.00 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாயும்  குறைந்து உள்ளது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வெள்ளி விலை நிலவரம்

கிராமுக்கு 40 பைசா அதிகரித்து 51.20 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.