தங்கம் விலை சர்ர்ரென குறைந்தது..! மக்கள் மகழ்ச்சி..! 

வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியதிலிருந்து தங்கம் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டது.

பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இதற்கு முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்ததன் மூலம் சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதாவது செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் 34 ஆயிரம் வரை ஆனது.

இந்த நிலையில் மீண்டும் குறைய தொடங்கிய தங்கம் விலை தற்போது 28 ஆயிரத்து தாண்டி விற்பனையாகி வருகிறது. அவ்வாறு பார்த்தால் தற்போதைய நிலவரப்படி செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 31 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

அதன்படி இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 45 ரூபாய் குறைந்தும், சவரனுக்கு 344 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதே போன்று வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து 47.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது