சமீப காலமாகவே, தங்கத்தின் விலை 33 ஆயிரம் ரூபாயை எட்டியதால், தங்க நகை வாங்க விரும்பியவர்கள் கூட வாங்குவதற்கு அச்சம் அடைந்தனர். அந்த அளவிற்கு நகைகளின் விலை உச்சத்தை தொட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்க நகையின் விலையில் சற்று   குறைவு ஏற்பட்டது. அந்த வகையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று, தங்கம் விலை சவரனுக்கு 624 ரூபாய் குறைந்துள்ளது. 

32 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் ஒரு பவுன் தங்கம் விற்பனை செய்யப்படுவதால், தங்கம் வாங்க விருப்பம் உள்ளவர்கள், நகைக்கடைகளுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

நேற்று 4,064 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று 78 ரூபாய் குறைந்து 3,986 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 32 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், 624 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிலோ, ஆயிரத்து 600 ரூபாய் விலை குறைந்து 47 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.