10 ஆம் தேதி.. திருவண்ணாமலையில்....! 12 பேருக்கு தங்கம்..! 72 பேருக்கு வெள்ளி..! நீங்கள் செய்ய வேண்டியது என்ன..? 

வருகிற 10ஆம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிய வாய்ப்பு உள்ளது. இதனை தொடர்ந்து பொது இடங்களில் மாசு ஏற்படாத வண்ணம் இருக்க திருவண்ணாமலைக்கு வருகை புரியும் பக்தர்கள் துணிப்பை மற்றும் சணல் பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

அதன்படி வருகை புரியும் பக்தர்கள் பெரும் டிக்கெட் கவுண்டரில், சணல் பையையோ அல்லது துணி பையையோ கொண்டு வரும் நபர்களின் விவரங்களை சேகரித்து குலுக்கல் முறையில் 12 பேரை தேர்வு செய்து 12 பேருக்கும் தலா 2 கிராம் தங்க நாணயம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 72 பேருக்கு தலா 2 கிராம் வெள்ளி நாணயம் வழங்க உள்ளதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ஒரு அதிரடி முடிவை மாவட்ட நிர்வாகம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து அறிவித்து உள்ளது. இதன் மூலம் இது தவிர்த்து திருவண்ணாமலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு அங்கேயே சணல் பையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்

விஞ்ஞானம் வளர வளர எந்த அளவுக்கு அட்வான்ஸா வாழ்க்கையை கொண்டு சென்றோமோ அதே வேகத்தில் தற்போது ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்காகவும் சுற்றுச்சூழலை  இயற்கையை நோக்கி பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இப்போது நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இப்படியான ஒரு தருணத்தில் நம்மை சுற்றி உள்ள இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பயன்பாடு அறவே இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் பொருட்டு, இதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம்.. இனியாவது மாற்றம் வருமா நாம் வாழும் இந்த சமுதாயத்தில்...?